என் இனிய இயந்திரா

  • Main
  • Fiction
  • என் இனிய இயந்திரா

என் இனிய இயந்திரா

சுஜாதா
এই বইটি আপনার কতটা পছন্দ?
ফাইলের মান কিরকম?
মান নির্ণয়ের জন্য বইটি ডাউনলোড করুন
ডাউনলোড করা ফাইলগুলির মান কিরকম?
சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. அறிவியல் வளர்ச்சி அதனால் அமைந்த இயந்திரங்களின் முன்னேற்றம், அவற்றால் வாழ்க்கையில் ஏற்பட்ட வேகம், இம்மூன்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இலக்கியத்தில் ஒரு மாறுதலை விளைவித்தன. வாழ்க்கையில் புதுமைகளையும் அவற்றால் நேர்ந்த போராட்டங்களையும் விளக்க இலக்கியம் உதவுகிறது. அந்த வகையில் கி.பி.2022-இல் அறிவியல் ஆட்சி நடந்தால் அப்பொழுது நாட்டின் நிலை நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை ஆகியவை எப்படியிருக்கும் என்பதை சுஜாதா என் இனிய இயந்திரா என்ற நூலில் தீர்க்க தரிசனமாகப் படைத்துள்ளார்.

அறிவியல் (Scientific) யுகம் இது. எங்கும் எதிலும் அறிவியல் ஊடுருவும் நேரம். எனவே மக்கள் இலக்கியமாகிய நாவலிலும் விஞ்ஞானம் நுழைந்ததில் வியப்பில்லை. அறிவியல் நுட்ப நுணுக்கங்களைத் திட்டத்தோடு கதையின் ஊடே எளிதே, இனிதே விளையாட்டாக இவரது நாவல்கள் விளக்கிச் செல்கின்றன. துப்பறியும் பாங்கும், பாலுணர்வும் அறிவியல் நுட்பங்களும் இவர் கதையில் கலந்து வரக் காணலாம். இவரது கதைகள் பழமையில் அறிவியலைப் புகுத்திப் புதுமை ஒளிவீசச் செய்து ஒரு திருப்பத்தை உருவாக்கியுள்ளன. பாமரரும் விமானம், கம்ப்யூட்டர் போன்றன பற்றிக் கதையோடு தெரிந்து கொள்கின்றனர்.

கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
---

என் இனிய இயந்திரா - சுஜாதா
ক্যাটাগোরিগুলো:
সাল:
2019
সংস্করণ:
First
প্রকাশক:
கிழக்கு
ভাষা:
tamil
পৃষ্ঠা:
177
ফাইল:
PDF, 1.33 MB
IPFS:
CID , CID Blake2b
tamil, 2019
অনলাইনে পড়া
তে রূপান্তর প্রক্রিয়া চলছে
-এ রূপান্তর ব্যর্থ হয়েছে

প্রায়শই ব্যবহৃত পরিভাষা